முகப்பு
கன்னியாகுமரி

குலசேகரத்தில் காச நோய் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

உலக காச நோய் தினத்தையொட்டி, குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி சார்பில் காச நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடத்தப்பட்டன.

Updated On : 29 மார்ச், 2018 at 5:52 AM
பகிர்:

உலக காச நோய் தினத்தையொட்டி, குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி சார்பில் காச நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடத்தப்பட்டன.
பொன்மனை அருகே மண்ணாரங்கோடு  சத்துணவுக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சுருளகோடு ஆரம்ப சுகாதார நிலையக் கண்காணிப்பாளர் சுரேஷ் வரவேற்றார். மருத்துவர்கள் சிசிர், சாந்தி செரின் சைலம், அஜித்குமார், குட்டைக்குழி காசநோய் தடுப்புப் பிரிவு மருத்துவ அலுவலர் அகமத் கபீர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முதுநிலை மருத்துவர்கள் நவீனா, இர்பானா, ராஜபார்த்தீபன் ஆகியோர் காச நோயின் விளைவுகள், நோய்த் தடுப்பு முறைகள் பற்றிய விளக்கினர்.
தொடர்ந்து ஹோமியோபதி மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிகளை சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவப் பரிவு,  குழந்தைகள் நலப்பிரிவு மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவு இணைந்து செய்திருந்தது.  முன்னதாக, கல்லூரி வளாகத்தில் காசநோய்  விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.