கன்னியாகுமரி

குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம்  நாளை திறப்பு

குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலகத் தரம் வாய்ந்த அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம் திங்கள்கிழமை (மே 7) திறக்கப்படவுள்ளது.

DIN

குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலகத் தரம் வாய்ந்த அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம் திங்கள்கிழமை (மே 7) திறக்கப்படவுள்ளது.
குலசேகரத்தில் வேலாயுதன்பிள்ளை மருத்துவமனை 2006ஆம் ஆண்டுமுதல் தரம் உயர்த்தப்பட்டு, ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக பல்வேறு சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளுடன் செயல்படுகிறது. இங்கு தென்தமிழகத்தில் முதன்முறையாக உலகத்தரம் வாய்ந்த அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம் திங்கள்கிழமை தொடங்கப்படுகிறது. 
இதுகுறித்து இம்மருத்துவக் கல்லூரித் தலைவர் டாக்டர் சி.கே. வேலாயுதன் நாயர், இயக்குநர் டாக்டர் ரெமா.வி. நாயர் ஆகியோர் கூறியது:  இங்கு ஏராளமானோருக்கு  சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஆஞ்சியோ கிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை, 200-க்கும் மேற்பட்டோருக்கு இதய பலூன் வால்வு சிகிச்சை, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை, நுண்துளை அறுவை சிகிச்சை, 600-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை மற்றும் டிவைஸ் குளோசர் வால்வு சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில்,  உலகத் தரம் வாய்ந்த அதிநவீன புற்றுநோய் சிகிக்சை மையம் திங்கள்கிழமை தொடங்கப்படுகிறது. 24 சேனல் பிராக்கிதெரபி, அதிநவீன அரங்கு, முப்பரிமாண கதிர்வீச்சில் புற்றுநோயைக் கண்டறிதல்,  அதிநவீன லீனியர் ஆக்சிலேட்டர் வசதி, கதிர்வீச்சு சிகிச்சை,  ஹீமோதெரபி, புற்றுநோய் அறுவை சிகிச்சை, வலி மற்றும் பாலியேட்டிவ் கேர், புற்றுநோய் அல்லாத மற்ற பகுதிகளில் பக்க விளைவு ஏற்படுத்தாத அதிநவீன சிகிச்சை  மிகக்குறைந்த கட்டணத்தில் செய்யப்படவுள்ளது. 
புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் அச்சத்தைப் போக்க தனி கவுன்சலிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனி ஐ.சி.யூ. வசதி, ஹீமோதெரபிக்கு 30 படுக்கை வசதி, அதிநவீன V​a‌r‌i​a‌n - C‌l‌i‌n​ac 1X ​
இயந்திரம் மூலம் மிக விரைவான சிகிச்சை, v​a‌r‌i​a‌n-​G​a‌m‌ma M‌e‌d‌p‌l‌u‌s 1X இயந்திரம் மூலம் பிராக்கி தெரபி சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் கிரீஸ் தலைமையிலான மருத்துவக்குழு புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளனர்.
இங்கு அனைத்து வகையான கட்டணமில்லா காப்பீட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. பொதுமக்களுக்கு ரூ. 100-க்கு ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டை வைத்திருப்போரின் குடும்பத்தில் 5 பேருக்கு மருந்தகம் தவிர மற்ற அனைத்து மருத்துவப்  பரிசோதனைக்கும், அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சிகிச்சைக்கும் தக்கவாறு கட்டணத்தில் தள்ளுபடி உண்டு என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி என்ஜின் எண்ணெய் உற்பத்தி நிலையம் கண்டுபிடிப்பு: ரூ. 1 கோடி போலி பொருள்கள் பறிமுதல்

விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூளையாக செயல்பட்டவா் கைது

அடிப்படை குடிமைப் பணிகளில் முந்தைய ஆம் ஆத்மி அரசு தோல்வி - அமைச்சா் பா்வேஷ் சாடல்

காா், ஆட்டோ மீது டிடிசி பேருந்து மோதி இருவா் காயம்

தில்லியில் ஒரே நாளில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் விநியோகம் 76% அதிகரிப்பு

SCROLL FOR NEXT