கன்னியாகுமரி

கேரளத்திலிருந்து மீன் கழிவுகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

DIN


கேரளத்திலிருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சுருளகோடு அருகே பழுதாகி நின்ற நிலையில் போலீஸார் அதனை பறிமுதல் செய்தனர்.
கேரளத்தில் இருந்து குமரி மாவட்டப் பகுதிகளுக்கும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பகுதிகளுக்கும் அடிக்கடி மீன் மற்றும் இறைச்சிக் கழிவுகள் லாரிகளில் ஏற்றி வந்து கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கேரளத்தில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஒன்று சுருளகோடு அருகே செல்லன்திருத்தி பகுதியில் பழுதாகி நின்றது. இந்த லாரியிலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக அப்பகுதி வழியாக மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, லாரி ஓட்டுநர் லாரியை விட்டு தலைமறைவாகிவிட்டார். தகவலறிந்து வந்த குலசேகரம் போலீஸார், லாரியின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு பேசி, அவர்கள் அனுப்பிய லாரியில் மீன் கழிவுகள் ஏற்றப்பட்டு, மீண்டும் கேரளத்துக்கே கொண்டு செல்லப்பட்டது. மேலும் பழுதான லாரி பறிமுதல் செய்யப்பட்டு குலசேகரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

SCROLL FOR NEXT