கன்னியாகுமரி

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்கவேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன்

DIN

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள மக்களுக்கு  உணவு,  உடை, மின்சாரம், குடிநீர் போன்றவற்றை போர்கால  அடிப்படையில் வழங்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சனிக்கிழமை தக்கலையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மார்த்தாண்டம் மேம்பாலம் திறக்கபடுவதற்கு முன்பே அதிர்வு ஏற்படுகிறது என்றால் அதிர்ச்சி அளிக்கிறது. பாலம் அதிர்வு குறித்து விசாரணை நடத்தவேண்டும். 
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை நடைமுறைப்படுத்தவேண்டியது கேரள அரசின் கடமை. அதைதான் கேரள அரசு செய்து வருகிறது. மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மீது குற்றம் சாட்டுவது சரியல்ல.  இவ்விஷயத்தில் பாஜக அரசு இரட்டை வேடம் போடுகிறது. இதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். 
கஜா புயலின் போது  தமிழக அரசு  வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருக்கிறது.  இப்புயலின் பாதிக்கப்பட்டமக்களுக்கு போர்கால அடிப்படையில் உணவு, உடை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் வழங்க முழுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.  பாதிக்கப்பட்ட  மாவட்டங்களில்  குடிசைகள்,  வாழை ,தென்னை, பனை, போன்ற மரங்களும், சோளம், கரும்பு  மற்றும் கால் நடைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.  பாதிக்கப்பட்ட பகுதிகளில்  முழுமையான ஆய்வு நடத்தி  அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்க அரசு  நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றார் ஜி. ராமகிருஷ்ணன்.  பேட்டியின்போது மாவட்டச் செயலர் ஆர். செல்லசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT