கன்னியாகுமரி

செவிலியருக்கு பாலியல்  தொந்தரவு: இளைஞர் மீது வழக்கு

DIN

நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், பணியில் இருந்த செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவட்டாறு அருகே நிகழ்ந்த  சாலை விபத்தில் பலத்த காயமடைந்த  இளைஞர் சிகிச்சை பெற்றுவருகிறார். வார்ட்டில் தனியாக இருந்த அவர் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென கூச்சலிட்டாராம்.  சப்தம் கேட்டு பணியில் இருந்த செவிலியர் ஒருவர், இளைஞர் அருகில் சென்று காயம் பட்ட இடத்தில் வலி அதிகமாக உள்ளதா என கேட்டுள்ளார்.  அப்போது அந்த இளைஞர்,  செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதையடுத்து,  செவிலியர் கூச்சலிட்டாராம்.  அவரது சப்தம் கேட்டு பணியில் இருந்த மற்ற ஊழியர்கள் செவிலியரை மீட்டு  வெளியே அழைத்து வந்தனர். இளைஞரின் தவறான நடவடிக்கை குறித்து, மருத்துவமனையின் உயர் அதிகாரிகள் கவனத்துக்கு ஊழியர்கள் கொண்டு சென்றனர். மேலும் தங்களுக்கு பணியில் பாதுகாப்பு இல்லை எனக்கூறி, மருத்துவமனை ஊழியர்களும்,  செவிலியர்களும் போராட்டம் நடத்தவும் தயாராகினர்.
 இதையறிந்த மருத்துவமனை உயர் அதிகாரிகள், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் செவிலியரிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை வேறு வார்டுக்கு மாற்றினர். மருத்துவமனை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில்,  ஆசாரிப்பள்ளம் போலீஸார் இளைஞர் ரெஜி(31) என்பவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்  பதிந்து  விசாரித்து  வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT