நாகர்கோவிலில் மக்கள் குறைதீர் முகாம்
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத் திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 251 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இந்த கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, முன்னாள் படைவீரர்களின் சிறார்களிடையே 2017 -18 ஆம் கல்வி ஆண்டிற்கான பிளஸ் 2-வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற எம். பீரீத்தியின் தந்தை ஜெ. மணியிடம் ரூ. 5 ஆயிரத்துக்கான காசோலையையும், 2ஆம் மதிப்பெண்கள் பெற்ற ஸ்ரீஷாவின் தாயார் ராணியிடம் ரூ. 3 ஆயிரத்துக்கான காசோலையையும் ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் எஸ். கிறிஸ்டோபர் ஜெயராஜ் மற்றும் அனைத்துத் துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.