கன்னியாகுமரி

குமரி முக்கடல் சங்கமத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

DIN

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில்  சிவசேனை சார்பில் 73 விநாயகர் சிலைகள் வெள்ளிக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.
   விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சிவசேனை சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்தச் சிலைகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை பிற்பகல் நாகர்கோவில் நாகராஜா திடலுக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டது.
 இதன் தொடக்க விழா நிகழ்வுக்கு தென்மண்டலச்  செயலர் பா.ராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஜெயமனோகர் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை மாநிலத் தலைவர் ஏ.பி.ராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் கோட்டாறு, சுசீந்திரம், பொற்றையடி, கொட்டாரம் வழியாக விவேகானந்தபுரம் சந்திப்பை அடைந்தது. 
அங்கு கன்னியாகுமரி நகரத் தலைவர் சி.எஸ்.சுபாஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்துக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் ஒவ்வொரு சிலையாக கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டது.  இதையொட்டி,  கன்னியாகுமரி டி.எஸ்.பி. முத்துபாண்டியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தீயணைப்பு மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  
குழித்துறை தாமிரவருணி ஆற்றில்..
தமிழக  சிவசேனை கட்சி சார்பில் மேல்புறம் ஒன்றியத்தில் 62 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த சிலைகள் வெள்ளிக்கிழமை மேல்புறம் அருகேயுள்ள அளப்பன்கோடு ஈஸ்வரகால பூதத்தான் திருக்கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு  மாவட்டத் தலைவர் பி. வேலாயுதன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணித் தலைவர் சி.எஸ். சந்தோஷ் சஜு முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் சிதறால் வி. ராஜேஷ்  ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
 இந்த  ஊர்வலம் மேல்புறம், வட்டவிளை, கழுவன்திட்டை வழியாக குழித்துறை தாமிரவருணி ஆற்றங்கரைக்கு கொண்டு வந்து,  தொடர்ந்து வாவுபலி பொருள்காட்சி மைதானத்தில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தாமிரவருணி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரம் - செகந்திராபாத் ரயில் சேவை நீட்டிப்பு

பழனியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வைகையாற்றில் கழிவுநீா் கலப்பு: பொதுப் பணித் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

ரூ. 3.69 லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.22 கோடி

SCROLL FOR NEXT