கன்னியாகுமரி

சங்கரன்கோவில், புளியங்குடி, சிவகிரியில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

DIN

சங்கரன்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 36 விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.
சங்கரன்கோவில் நகரில் வைக்கப்பட்டிருந்த 36 விநாயகர்சிலைகளும் சுவாமி சன்னதிக்கு கொண்டு வரப்பட்சு, பின்னர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
ஊர்வலத்தை புதிய தமிழகம் மாவட்டச் செயலர் இன்பராஜ் தொடங்கிவைத்தார். பாஜக மாநிலப் பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம், இந்து முன்னணி மாவட்டச் செயலர் ஆறுமுகச்சாமி, பார்வர்டு பிளாக் தங்கப்பாண்டி, சங்கரன்கோவில் தொகுதி பாஜக பொறுப்பாளர் பாண்டித்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புளியங்குடி: புளியங்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட 11 விநாயகர் சிலைகளும், சிந்தாமணியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 2 சிலைகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கருப்பாநதி அணையில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
சிவகிரி: அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சர்க்கரை விநாயகர் கோயிலில் ஏழரை அடி உயர விநாயகர் சிலை 11ஆவது ஆண்டாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
இந்நிலையில், சனிக்கிழமை விசர்ஜனம் செய்வதற்காக சர்க்கரை விநாயகர் சிறப்பு அலங்காரத்துடன் முக்கிய வீதிகள் வந்தார். பின்னர் ராஜசிங்கப்பேரி கண்மாயில் சர்க்கரை விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, தேவேந்திர குல வேளாளர் சமுதாய நிர்வாகிகள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT