கன்னியாகுமரி

மாதவபுரம் கோயிலில் ரூ.1 கோடியில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தொடக்கம்

DIN

கன்னியாகுமரியை அடுத்த மாதவபுரம் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயிலில் ரூ. 1 கோடியே 10 லட்சம் செலவில் ராஜகோபுரம் அமைப்பதற்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 கன்னியாகுமரியை அடுத்த மாதவபுரத்தில் அமைந்துள்ள இக்கோயில் 120 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் பக்தர்கள் பங்களிப்புடன் ராஜகோபுரம் அமைக்க  முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணியை மாவட்ட அதிமுக செயலர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட அதிமுக வழக்குரைஞர் பிரிவு முன்னாள் செயலர் டாக்டர் சி.என்.ராஜதுரை ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
 இதில்,  ஊர் நிர்வாகிகள் இ.முத்துசுவாமி, கிருஷ்ணசுவாமி, அதிமுக நிர்வாகிகள் டி.சேவியர் மனோகரன், பா.தம்பித்தங்கம், பி.வின்ஸ்டன், எஸ்.அழகேசன், தாமரை தினேஷ், கோட்டாறு கிருஷ்ணன், விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT