கன்னியாகுமரி

சாலையில் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

DIN

ஆரல்வாய்மொழியில் டிப்பர் லாரி மோதியதில் ஆல மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் - காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலையில், ஆரல்வாய்மொழி கன்னியாகுமரி கூட்டுறவு நூற்பாலை அருகிலிருந்து முப்பந்தல் வரை சாலையோரம் மிகவும் பழமையான ஆலமரங்கள் உள்ளன.
இந்நிலையில், கன்னியாகுமரி கூட்டுறவு நூற்பாலை அருகே சாலையோரம் நின்ற ஆலமரம் மீது டிப்பர் லாரி செவ்வாய்க்கிழமை மோதியதில் மரம் சாலையில் சாய்ந்தது. 
இதனால் சாலையின் இரு பகுதியிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்துக்கு வந்த ஆரல்வாய்மொழி போலீஸார், மது போதையில் இருந்த லாரியின் ஓட்டுநர் பூட்டேந்தி கல்லெடை பகுதியைச் சேர்ந்த ஏபெல் ராஜ்குமாரை கைதுசெய்தனர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆலமரம் அகற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT