கன்னியாகுமரி

சாத்தான்குளத்தில் கழிவுகளால்நோய் பரவும் அபாயம்

DIN

சாத்தான்குளம் பேருந்து நிலைய கழிப்பறையிலிருந்து கழிவுகளை ஓடையில் திறந்து விடுவதால், சுகாதாரச் சீர்கேடு  உருவாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் பேரூராட்சி வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் உள்ள கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் ஓடை அமைக்கப்பட்டு அமராவதி ஓடையில் இணைக்கப்பட்டுள்ளது. 
இதற்கிடையே பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையின் கழிவுநீர்த் தொட்டி நிரம்பியதால், அதிலிருந்து வெளியேறும் கழிவுகள் கழிவுநீரோடையில் திறக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கழிவுநீரோடு கழிப்பறை கழிவுகளும் செல்வதால் மிகுந்த துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் 
பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சுகாதாரச் சீர்கேடுகள் உருவாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

SCROLL FOR NEXT