கன்னியாகுமரி

களியல் அருகே அரசு நிலத்திலிருந்த ரூ. 4 லட்சம் மரங்களை வெட்டிக் கடத்த முயற்சி: யானை, பொக்லைன் பறிமுதல்

DIN

குமரி மாவட்டம், களியல் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த ரூ. 4 லட்சம் மரங்களை வெட்டிக் கடத்த முயன்றவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்காகப் பயன்படுத்தப்பட்ட யானை மற்றும் பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விளவங்கோடு வட்டம், குளப்பாறை அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த முதிர்ந்த பலா மரங்களை ஒரு கும்பல் யானை மற்றும் ஜேசிபி இயந்திரத்துடன் வெட்டிக் கடத்த முயல்வதாக வருவாய்த் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விளவங்கோடு வட்டாட்சியர் புரேந்திரதாஸ் மற்றும் அலுவலர்கள் அங்கு சென்றனர். எனினும், இதை முன்னதாக அறிந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
இதையடுத்து, மரங்களை வெட்டிக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட யானை, பொக்லைன் இயந்திரம், ரூ. 4 லட்சம் மதிப்பிலான மரங்கள், ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், அவற்றை விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுசென்றனர். களியல் வனச்சரக அலுவலரிடம் யானை ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து கடையாலுமூடு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து மரங்களை வெட்டிக் கடத்த முயன்றவர்களை தேடிவருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை உதவி வனப் பாதுகாவலர் ஷாநவாஸ் கான் கூறியது:  மரம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் ஒருவரின் யானை பறிமுதல் செய்யப்பட்டு, வனத்துறையின் கட்டுப்பாட்டில், அதன் உரிமையாளரின் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. யானை உரிமையாளர் மீதும்  வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT