கன்னியாகுமரி

குமரியில் கொளுத்தும் வெயில் திற்பரப்பு அருவியில்  சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்

DIN

குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையிலும், திற்பரப்பு அருவியில் மிதமான  அளவில் தண்ணீர் கொட்டுவதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் தற்போது கடும் வெயில் நிலவி வருகிறது. பகல் வேளைகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் இயல்பாக நடமாட முடியாத அளவுக்கு உள்ளது. காடுகளிலுள்ள மரங்களில் இலையுதிர்வுக்குப் பின்னர் புதிய இலைகள் துளிர்த்து பசுமையாக காட்சியளிக்கும் போதும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. 
இந்நிலையில் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. தமிழகத்தில் தற்போது குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் இல்லாத நிலையில் பல்வேறு பகுதிகளிலுள்ள சுற்றுலாப் பயணிகளும் திற்பரப்பு அருவிக்கு படையெடுக்கின்றனர். விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT