மூளகுமூட்டில் அமைதி பேரணி, கூட்டுத் திருப்பலி
காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் , முளகுமூடு தூய மரியன்னை
காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் , முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தில் கூட்டுத் திருப்பலி, அமைதி பேரணி ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
குழித்துறை மறைமாவட்ட கத்தோலிக்க சங்கம், முளகுமூடு கத்தோலிக்க சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம் தலைமை வகித்தார். அருள்பணியாளர்கள் ஜெரால்டு ஜஸ்டின், ஆன்றனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நினைவு திருப்பலியில் வீரர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களின் குடும்பத்திற்கு மன அமைதியும், ஆறுதலும் கிடைக்க சிறப்பு இறைவேண்டல் நடைபெற்றது.
திருப்பலி முடிவுற்றவுடன் மறை மாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம் தலைமை வகிக்க கத்தோலிக்க சங்கத் தலைவர் பிரைட் சேவியர் முன்னிலையில் அமைதி பேரணி நடைபெற்றது.
பின்னர் தூய மரியன்னை ஆலய வளாகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ராணுவ வீரர்களின் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.