கன்னியாகுமரி

நாகர்கோவில்-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

DIN

நாகர்கோவில்-களியக்காவிளை வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
தக்கலையில் நடைபெற்ற அமைப்பின் கன்னியாகுமரி மாவட்டக்குழுக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் விஜயராகவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எட்வின் பிரைட், மாவட்டப் பொருளாளர் வி. ரெதீஷ், மாநில செயற்குழு உறுப்பினர் உச்சிமாகாளி உள்பட பலர் பேசினர். 
தீர்மானங்கள்: வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி இம்மாதம் 28, 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய தொடர் போராட்டத்தை முன்னிட்டு 28 ஆம் தேதி நாகர்கோவிலிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், 29 ஆம் தேதி கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும், 30 ஆம் தேதி களியாக்கவிளை பேருந்து நிலையம் முன்பும் மறியல் போராட்டம் நடத்துவது;  நாகர்கோவில்-களியாக்கவிளை வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்; பத்மநாபபுரத்தில் சேதமடைந்து வரும் அரண்மனை சுவரில் வளர்ந்து காணப்படும் மரங்களை அகற்றுவதோடு, இச்சுவரை பாதுகாத்து பராமரிக்க வேண்டும்; குமரி மாவட்டத்திலுள்ள குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட  நீர் நிலைகளில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; நீர் நிலைகளை தூர் வார நடவடிக்கை வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பெண்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது’

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

குடிமராமத்து திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தல்

நீா்மோா் பந்தல்: பாஜகவினருக்கு அண்ணாமலை வேண்டுகோள்

குருவாடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

SCROLL FOR NEXT