கன்னியாகுமரி

கொல்வேல் கிராமத்தில் குருசடி அர்ச்சிப்பு விழா

DIN

திருவட்டாறு- திருவரம்பு சாலை கொல்வேல் கிராமத்தில் புனித கார்மல் அன்னை ஆலயம் உள்ளது. இதன் அருகில் புதுப்பிக்கப்பட்ட குருசடி  அர்ச்சிப்பு விழா குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஏசு ரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.  பங்குத்தந்தை ஒய்சிலின் சேவியர் முன்னிலை வகித்தார்.
அப்போது,  ஆண்டுக்கொரு ஏழைக்கு வீடுகட்டும் திட்டத்திற்காக ரூ.2 லட்சம் வைப்புத்தொகையாக வைக்கப்பட்டது. மேலும், பங்கு மக்கள் பயன்பெறவும், எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் "கொல்வேல் சுடர்' என்னும் மும்மாத இதழும், பங்கு இணையதளமும் தொடங்கப்பட்டன. நிகழாண்டிலிருந்து கிறிஸ்து பிறப்பு விழாவின்போது ஏழை ஒருவருக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் வீடுகட்டிக் கொடுக்கப்படும்.  செந்தறையில் பங்கில் இந்தத் திட்டம் 2016இல் தொடங்கப்பட்டதாக அருள்பணியாளர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT