கன்னியாகுமரி

பத்மநாபபுரம் நகராட்சியில் கலந்தாய்வுக் கூட்டம்

DIN

பத்மநாபபுரம் நகராட்சியில் திடக்கழிவு, பிளாஸ்டிக்  கழிவு மேலாண்மை துணை விதிகள்  குறித்து கலந்தாய்வுக் கூட்டம்  திங்கள்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு நகராட்சி ஆணையர் மூர்த்தி தலைமை வகித்தார்.  துப்புரவு அலுவலர் ராஜாராம் முன்னிலை வகித்தார்.  சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், சுகாதார மேற்பார்வையாளர் மோகன்,  பத்மநாபபுரம்  நகர வணிகர் சங்க பொதுச் செயலர்  விஜயகோபால்,  தலைவர் ரேவன்கில், நிர்வாகிகள், நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
நகராட்சிக்குள்பட்ட  வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர் களுக்கு திடக்கழிவு, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை துணை விதிகள் குறித்தும், கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் முறை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT