கன்னியாகுமரி

பத்மநாபபுரம் நகராட்சியில்  பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

DIN

பத்மநாபபுரம்  நகராட்சியில்  86 வணிக நிறுவனங்களில், நகராட்சி ஆணையர்  செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து  32 கிலோ தடைவிதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தார். மேலும், கடை உரிமையாளர்களுக்கு ரூ. 6,200 அபராதம் விதிக்கப்பட்டது.
பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட தக்கலை சந்தைச் சாலை, அரண்மனைச் சாலை, இரணியல் சாலை, புலியூர்குறிச்சி ஆகிய பகுதிகளில்  உள்ள  86 வணிக நிறுவனங்களில் நகராட்சி ஆணையர் மூர்த்தி தலைமையில் துப்புரவு அலுவலர் ராஜாராம் , துப்புரவு ஆய்வாளர்  முத்துராமலிங்கம், மேற்பார்வையாளர் மோகன் மற்றும் பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 
அப்போது, பிளாஸ்டிக் கப்புகள், உறிஞ்சும் குழல்கள்,  பைகள் என 32 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள்  பறிமுதல் செய்யப்பட்டன.  மேலும், கடை உரிமையாளர்களிடமிருந்து மொத்தம் ரூ.6, 200 அபராதம் வசூலிக்கப்பட்டது.  தடைசெய்யப்பட்ட  பிளாஸ்டிக் பொருள்களை மீண்டும் பயன்படுத்துவது தெரியவந்தால் கூடுதல் அபராதம் விதிக்கப்படுவதுடன்,  கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  ஆணையர் எச்சரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT