கன்னியாகுமரி

என்.ஐ. கலை அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்

DIN

குமாரகோவில் என்.ஐ. கலை அறிவியல் கல்லூரியில், காட்சி தொடர்பியல் துறை சார்பில் "எக்கோ ஃபெஸ்ட்'  எனும் தலைப்பில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
கல்லூரி முதல்வர் எஸ்.பெருமாள் தலைமை வகித்தார். காட்சி தொடர்பியல் துறை தலைவர் சைனி வரவேற்றார். கல்லூரித் தாளாளர் ஏ.பி.மஜீத்கான்,  பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு இயக்குநர் கே.ஏ. ஜனார்த்தனன் ஆகியோர்  வாழ்த்திப் பேசினர். 
திரைப்பட இயக்குநர் எழில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். இதில், மாவட்டத்திலுள்ள கல்லூரி மாணவர், மாணவிகள் பங்கேற்றனர். அவர்களிடையே கலைப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துறைத் தலைவர்  சிபி.எஸ்.குமார் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT