கன்னியாகுமரி

பாபநாசம் கல்லூரியில் கருத்தரங்கம்

DIN


பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நூலகத் துறை சார்பில் ஒருநாள் கருத்தரங்கு  நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் க. சுந்தரம் தலைமை வகித்தார். ஜான் விக்டர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்-மாணவிகளுக்கு வேலைவாய்ப்புக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு சார்ந்த மென்பொருள் மற்றும் வெற்றி பெறுவதற்கான நுணுக்கங்கள் குறித்து கருத்துரை வழங்கினார். 
முதுநிலை ஆங்கிலம் 2ஆம் ஆண்டு மாணவி மோனிசா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ரா. நடராஜன் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் முத்துமுருகன், மாயாண்டி, இந்துபாலா, மாணவிகள் கலந்துகொண்டனர். இளநிலை ஆங்கிலம் 3ஆம் ஆண்டு மாணவிகள் அகிலாண்டம், செ.சா. ஆஷ்லி ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். நூலகர் எஸ். பாலச்சந்திரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி நூலகர் சண்முகானந்தபாரதி, சந்தான சங்கர், சபரி ஆகியோர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT