கன்னியாகுமரி

முள்ளங்கனாவிளையில் மின்வயர்கள் திருட்டு: குடிநீர் விநியோகம் பாதிப்பு

DIN

முள்ளங்கனாவிளை ஊராட்சியில்  குடிநீர் ஏற்றும் மோட்டார் அறைகளில்   மின்வயர்கள்  திருடுபோனதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள்  அவதியடைந்துள்ளனர்.
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட முள்ளங்கனாவிளை ஊராட்சியில் முக்கிய குடிநீராதாரமாக இருப்பது கொக்குறுணி குளக்கரையில் அமைந்திருக்கும் ஆழ்குழாய் கிணறுகள் ஆகும்.  இங்கிருந்து 12 குடிநீர் பகுதிகளுக்கு   ஆழ்குழாய் கிணறுகள் மூலம்   பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு  வருகிறது.
இதில், தாழக்கன்விளை, பண்டாரவிளை, மயில்பறம்புவிளை உள்பட 9  ஆழ்குழாய் கிணறுகளில்  மின்கம்பத்திலிருந்து  மின்மோட்டாருக்கு செல்லும் மின்வயரை மர்ம நபர்கள் கடந்த திங்கள்கிழமை திருடிச் சென்றனராம்.  இதனால்,  சத்திவிளை, அங்கோட்டுவிளை, முள்ளங்கனாவிளை, கோனான்விளை, மலவிளை, மணலிதட்டுவிளை உள்ளிட்ட பகுதிகளில்  பொதுமக்கள் குடிதண்ணீரில்லாமல் மிகவும் அவதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து புகாரின் பேரில்  கருங்கல் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், ஊராட்சி நிர்வாகம் இது குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு சீராக  குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT