கன்னியாகுமரி

என்.ஐ. கலை அறிவியல் கல்லூரியில் உணவுத் திருவிழா

DIN


கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் என்.ஐ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. 
இத்திருவிழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில்  மாணவர், மாணவிகள் தயாரித்த உணவு வகைககள் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தது. பாரம்பரிய உணவு முதல்  சம கால உணவு வரை வைக்கப்பட்டிருந்தது.  மாணவர்,
மாணவிகள், கல்லூரிப் பணியாளர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தனர். 
இத்திருவிழாவை கல்லூரி முதல்வர் எஸ். பெருமாள் தொடங்கி வைத்தார். கல்லூரியின் தாளாளர் ஏ.பி. மஜீத்கான், உணவகங்களை பார்வையிட்டு  மாணவர், மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதில், பல்கலைக்கழகத்தின் மனித வளமேம்பாட்டு இயக்குநர் கே.ஏ.ஜனார்த்தனன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். சிறந்த உணவகங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT