கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழியில்  அ.ம.மு.க. வேட்பாளர் பிரசாரம்

DIN

ஆரல்வாய்மொழியில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் லட்சுமணன்  புதன்கிழமை பிரசாரத்தை  தொடங்கினார்.
இதையொட்டி,  ஆரல்வாய்மொழி   தெற்கு பெருமாள்புரம்  உச்சினிமாகாளியம்மன் கோயில் மற்றும் முத்தாரம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து,  ஆரல்வாய்மொழியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். 
 பின்னர் வடக்கூர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ரத வீதி,  நடுவூர்,  மிஷியன் காம்பவுன்டு, செண்பகராமன்புதூர்,  மாதவ லாயம், சகாயநகர்,   வெள்ளம் டம், பீமநகரி,  தாழக்குடி பேரூராட்சி,  இறச்சகுளம் ஊராட்சி, அழகிய பாண்டியபுரம், கடுக் கரை, தெள்ளாந்தி, திடல் மற்றும் தோவாளை ஒன்றியத்திற்கு உள்ளிட்ட  பல பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
  நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்டச் செயலர் கே.டி.பச்சைமால்,  ஒன்றியச் செயலர் கே.சி.யு. மணி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் நவமணி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலர் ராஜேந்திரன், மேற்கு மாவட்டச் செயலர் ஜெங்கிஸ், மகளிரணிச் செயலர் சிவகாமி,  நாகர்கோவில் நகரச் செயலர் அக்ஷய கண்ணன், முன்னாள் சட்டப் பேரவை  உறுப்பினர் நாஞ்சில் முருகேசன், சந்தோஷ், சகாயம், ஒன்றிய அம்மா பேரவைச் செயலர் சொக்கலிங்கம்,  இசக்கிமுத்து,  நிர்வாகிகள் நாகராஜன், பொன்பாண்டி, பொன்னு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT