கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் கடைக்கு தீவைப்பு

ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து சேதமாயின.

DIN

ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து சேதமாயின.
  செண்பகராமன் புதூர் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின் மேற்பார்வையாளராக செந்தில்வேல் (38)  உள்ளார். வழக்கம் போல், கடையை வியாழக்கிழமை இரவு ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றனர். தேர்தல் நேரம் என்பதால் விற்பனையான பணம் ரூ.2.96 லட்சத்தை கடையினுள்ளே வைத்து சென்றனராம். வெள்ளிக்கிழமை அதிகாலை டாஸ்மாக் கடை தீப்பிடித்து எரிந்ததை கண்ட அப்பகுதி மக்கள், கடை மேற்பார்வையாளருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
  சம்பவ இடத்துக்கு வந்த நாகர்கோவில் தீயணைப்புத் துறையினர், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள், சி.சி.டி.வி.,யும் எரிந்து சேதமாகின.
விற்பனை பணம் ரூ.2.96 லட்சம் வைக்கப்பட்டு இருந்த இரும்பு பெட்டிக்கு எந்தவித சேதமும் ஆகவில்லையாம்.   இது குறித்து ஆரல்வாய்மொழி போலீஸார் வழக்குப் பதிந்து  விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

தில்லி செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு வழக்கு: காஷ்மீரைச் சோ்ந்தவா் கைது

SCROLL FOR NEXT