கன்னியாகுமரி

குளச்சல் பகுதியில் பைக் திருட்டு வழக்கில் 4 இளைஞர்கள் கைது

DIN

குமரி மாவட்டம், குளச்சல்  பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டது தொடர்பான வழக்கில்  4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
குளச்சல் பகுதியில் சைமன்காலனியைச் சேர்ந்த சுபின், சன்னதித் தெரு ரமேஷ், பனவிளை மகேஷ், மேக்கோடு ஆனந்த் ஆகியோர் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் இரவில் திருட்டுப் போயினவாம். இதுகுறித்த புகாரின்பேரில், குளச்சல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இரும்பிலி சந்திப்பில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த  4 இளைஞர்களை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.  அதில், உதயமார்த்தாண்டத்தைச் சேர்ந்த மரிய கிராஸ்வின் (20), லியோன் நகரைச் சேர்ந்த எபின் நாயகம் (21), இரும்பிலி கரையைச் சேர்ந்த முகமது அனஸ் (22) , அகஸ்தீசுவரத்தைச் சேர்ந்த கண்ணன் (20) ஆகியோர் என்பதும், குளச்சல் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்ததாம். இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்களை மீட்டனர்.
இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறியது: ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, மோட்டார் சைக்கிள்களை திருடி ஆலஞ்சி குன்னங்கல் பாறைக்குக் கொண்டு சென்று பழைய நம்பர் பிளேட்டுகளை கழற்றி விட்டு, போலி நம்பர் பிளேட்டுகளை பொருத்தி விற்பனை செய்துள்ளனர். 
குளச்சல் மட்டுமன்றி தக்கலை, கருங்கல், மார்த்தாண்டம், நாகர்கோவில் கோட்டாறு பகுதிகளிலும் அவர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT