கன்னியாகுமரி

சுசீந்திரம் கோயிலில் தெப்பத் திருவிழா

DIN

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 
இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ஆம் திருநாளான திங்கள்கிழமை (மே 13) தேரோட்டம் நடைபெற்றது.
இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, தெப்பத்தில் தாணுமாலய சுவாமி, அறம்வளர்த்தநாயகி அம்பாள், பெருமாள்  எழுந்தருளினர். இதையடுத்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தெப்பத் திருவிழா தொடங்கியது. தெப்பக்குளத்தில் தெப்பம் 3 முறை வலம் வந்தது. இதில், திரளான பக்தர்கள்  சுவாமி தரிசனம் செய்தனர். இரவில், சுவாமிக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT