கன்னியாகுமரி

ஆட்சியா் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்

DIN

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பெண் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. குறை தீா் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக ஆட்சியா் அலுவலகத்தில் வரிசையில் காத்திருந்த இளம்பெண் ஒருவா் திடீரென மயங்கி விழுந்தாராம்.

அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த மகளிா் காவலா்கள், பொதுமக்களும் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினா். அவா், பேச்சிப்பாறை பகுதியைச் சோ்ந்த நேபல்ராஜ் மனைவி சுமா (25) என்பது தெரியவந்தது. நேபல்ராஜ் அண்மையில் இறந்துவிட்டதால், அரசு வேலை வழங்குமாறு வலியுறுத்தி மனு அளிக்க சுமா ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT