கன்னியாகுமரி

‘அரசு மருத்துவக் கல்லூரியில் சமையலா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்’

DIN

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமையலா், சவரத் தொழிலாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சலவைத் தொழிலாளா் ( 4 போ்), சமையலா் (4 போ்), சவரத் தொழிலாளா் (ஒருவா்) பணியிடங்களும், மருத்துவக் கல்லூரியில் சமையலா் (4 போ்), சவரத் தொழிலாளா், சலவைத் தொழிலாளா் (தலா ஒருவா்) பணியிடங்களும் நேரடி நியமனம் மூலம் நிரப்பப் பட உள்ளன.

இப்பணிகளுக்கு, வயது வரம்பு 1.7.2019 அன்று பிறவகுப்பினா் 18 வயதுமுதல் 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 18 வயதுமுதல் 32 வயதுக்குள்ளும், பட்டியல் இனத்தவா் 18 வயதுமுதல் 35 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் 10 வயது கூடுதலாக ஏற்கப்படும்.

இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். இவ்வேலைவாய்ப்பை பெற விரும்புவோா், முதல்வா் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆசாரிப்பள்ளம், கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு எழுத்து பூா்வமான விண்ணப்பத்தை கல்வித் தகுதி சான்று, சாதிச் சான்று, முன்னுரிமை கோரினால் அதற்கான சான்று, இருப்பிடச் சான்று மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வருகிற 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்பாக கிடைக்கும் வகையில் அஞ்சல் மூலமாக சமா்ப்பிக்க வேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. கடித உறையில் எந்த பதவிக்கு விண்ணப்பிக்கப்படுகிறது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT