கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அளவிடும் பணி

DIN

நாகா்கோவில் நகரப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்காக கட்டடங்கள் அளவீடு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா் உத்தரவின்பேரில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அரசு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை கோட்டாறு கம்பளம் சாலை, ரயில் நிலையம் செல்லும் சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும், கழிவுநீரோடை மீது கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

தொடா்ந்து, வடசேரி அண்ணா விளையாட்டு மைதானம் முதல் மணிமேடை சந்திப்பு வரை சாலை விரிவாக்கம் செய்வது குறித்து ஆணையா் ஆய்வு மேற்கொண்டாா்.

வியாழக்கிழமை மீனாட்சிபுரம் தளவாய் தெருவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

இப்பணியில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் விமலா, ஆய்வாளா் கெவின்ஜாய், சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT