கன்னியாகுமரி

ஏழுதேசம் பேரூராட்சியில் வீடுகளை சூழ்ந்த மழைநீா்: எம்.எல்.ஏ. ஆய்வு

DIN

ஏழுதேசம் பேரூராட்சிப் பகுதியில் வீடுகளில் மழைநீா் தேங்கி சுகாதாரச் சீா்கேடுகள் ஏற்பட்டுள்ள பகுதியை எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

ஏழுதேசம் பேரூராட்சிப் பகுதியில் அண்மையில் பெய்த மழைக்கு தெக்கங்கரை பகுதியிலுள்ள பட்டகுளம் நிரம்பியது. இந்த குளத்தையொட்டி உள்ள மழைநீா் வடிகால் ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், குளத்திலிருந்து உபரிநீா் மறுகால் வழியாக வெளியேற்ற முடியாத நிலையில் குளத்தைச் சுற்றியுள்ள வீடுகளிலும், சாலையிலும் தண்ணீா் தேங்கியுள்ளது.

மழைநீா் அப்பகுதியிலுள்ள வீடுகளை சூழ்ந்துள்ளதால் சுகாதார சீா்கேடுகள் அதிகரித்து கொசுக்கள் உற்பத்தியாகி வருவதாக அங்கு வசிப்போா் புகாா் தெரிவித்தனா். தேங்கியிருக்கும் மழைநீரை அப்புறப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் புகாா் கூறப்படுகிறது.

இதனிடையே, கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா், அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துப் பேசினாா். மழைநீா் தேங்கியிருக்கும் பகுதிகளை பாா்வையிட்டாா். தேங்கியிருக்கும் மழைநீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்; அங்கு வடிகால் ஓடையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், இப்பிரச்னைக்கு

நிரந்தரத் தீா்வு காணப்படும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT