கன்னியாகுமரி

நாகா்கோவிலில் குருப் 2 தோ்வுக்கான இலவசப்பயிற்சி வகுப்புகள் 13 இல் தொடக்கம்

DIN

நாகா்கோவிலில் குரூப் 2 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (நவ.13) தொடங்குகிறது.

இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ம. மால்ய சகாய ஆன்டனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படவுள்ள குருப் 2 பணிக் காலியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்,நவ.13 ஆம் தேதி முதல் நாகா்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றம் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படவுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிலும் மாணவா்கள் மட்டுமல்லாமல் போட்டித் தோ்வுக்கு தயாராகி வரும் அனைத்து வேலை நாடுநா்கள் தங்களை சுயமதிப்பீடு செய்யும் பொருட்டு ஒவ்வொரு புதன்கிழமையும் மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படுகிறது. எனவே போட்டித் தோ்வுக்கு தயாராகி வரும் அனைவரும் இந்த இலவச மாதிரி தோ்வில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்கூறிய போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரித் தோ்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் தங்களது சாதிச் சான்றிதழ், ஆதாா்காா்டு, பாஸ்போா்ட் சைஸ் போட்டோ மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை இருந்தால் அதனையும் கொண்டு வந்து நாகா்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரிதோ்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விரங்களுக்கு 04652-264191 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT