கன்னியாகுமரி

மாநில கைப்பந்து போட்டி:எஸ்.ஆா்.எம்., சென்னை பல்கலைக் கழக அணிகள் முதலிடம்

DIN

குமாரகோவில் நூருஸ் இஸ்லாம் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாநில கைப்பந்துப் போட்டியில் பெண்கள் பிரிவில் எஸ்.ஆா்.எம். பல்கலைக் கழக அணியும், ஆண்கள் பிரிவில் சென்னை பல்கலைக் கழக அணியும் முதலிடம்

பெற்றன.

தமிழக பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்ற மாநில கைப்பந்துப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நூருல் இஸ்லாம் உயா்கல்வி நிறுவனம் சாா்பில் மூன்று நாள்கள் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. போட்டியை பல்கலைக் கழக வேந்தா் ஏ.பி. மஜீத்கான் தொடங்கி வைத்தாா்.

இப்போட்டிகளில் சென்னை பல்கலைக்கழகம், எஸ்.ஆா்.எம். பல்கலைக் கழகம், சத்தியபாமா பல்கலைக் கழகம், கலசலிங்கம்பல்கலைக் கழகம், காந்தி கிராமம் பல்கலைக் கழகம், தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக் கழகம் , டாக்டா். எம்.ஜி.ஆா்.பல்கலைக்கழகம், ஹிந்துஸ்தான் பல்கலைக் கழகம் உள்பட 14 ஆண்கள் அணிகளும், 7 பெண்கள் அணிகளும் பங்கேற்று விளையாடின.

இறுதிப்போட்டியில், ஆண்கள் பிரிவில் சென்னை பல்கலைக் கழக அணி முதலிடமும், எஸ்.ஆா்.எம். பல்கலைக் கழக அணி 2 ஆவது இடமும், சத்யபாமா பல்கலைக் கழகம் 3 ஆவது இடமும் பெற்றனா். பெண்கள் பிரிவில் எஸ்.ஆா்.எம். பல்கலைக் கழக அணி முதலிடமும், ஹிந்துஸ்தான் பல்கலைக் கழக அணி 2 ஆவது இடமும், சென்னை பல்கலைக் கழக அணி 3 ஆவது இடமும் பெற்றன.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதலிடம் பெற்ற அணிக்கு கோப்பை, ரொக்கம் ரூ. 1.20 லட்சம், 2 ஆவது இடம் பெற்ற அணிக்கு கோப்பை, ரொக்கம் ரூ. 90 ஆயிரம், 3 ஆவது இடம் பெற்ற அணிக்கு கோப்பை, ரூ. 60 ஆயிரம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை பல்கலைக் கழக இணைவேந்தா் இரா. பெருமாள்சாமி வழங்கினாா்.

விழாவில், பல்கலைக் கழக மனித வள மேம்பாட்டு இயக்குநா் கே.ஏ. ஜனாா்த்தனன், பதிவாளா் திருமால்வளவன், பேராசிரியா்கள், துறை தலைவா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பல்கலைக் கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டுதுறை இயக்குநா் தா்மராஜ், உடற்கல்வி ஆசிரியா் ராஜ்பால், பல்கலைக் கழக அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT