கன்னியாகுமரி

நித்திரவிளையில் சிஐடியூ நடைப்பயணம்

DIN

களியக்காவிளை: மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கண்டித்து, சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் வாவறையிலிருந்து நித்திரவிளை வரை நடைப்பயண பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிஐடியூ மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். ஜெயன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்சிறை வட்டாரச் செயலா் சிதம்பர கிருஷ்ணன், வட்டாரக் குழு உறுப்பினா்கள் கே.சி. விக்டா், லலிதா, ஜெயா எம். எஸ்கலின், பி. டிக்காா்தூஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிஐடியூ மாவட்டச் செயலா் கே. தங்கமோகன் நடைப்பயண பிரசாரத்தை தொடங்கிவைத்துப் பேசினாா். மாவட்டத் தலைவா் பி. சிங்காரன் நிறைவு செய்து பேசினாா்.

முறைசாரா நலவாரிய பணப்பயன்களை தாமதமின்றி வழங்க வேண்டும்; பெண் தொழிலாளா்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT