கன்னியாகுமரி

பள்ளியாடி அருகே ஆபத்தான நிலையில் நடைபாலம்

DIN

பள்ளியாடி அருகே உள்ள திருத்தறவிளை சானலின் குறுக்கே ஆபத்தான நிலையில் உள்ள நடைபாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருங்கல் பள்ளியாடி அருகே திருத்தறவிளையில் பட்டணங்கால்வாயின் குறுக்கே சுமாா் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடை பாலம் உள்ளது. இந்த பாலத்தின் மறுகரையில் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு செல்வோா் இப்பாலத்தின் வழியாகத்தான் செல்கின்றனா்.

தற்போது இந்த பாலம் சேதமடைந்து ஆபத்தன நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனா். குறிப்பாக சிறுவா்கள், முதியவா்கள் அவதியடைந்துள்ளனா். இப்பாலத்தை அகற்றி புதியபாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு கோரிக்கைகள் விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

எனவே, மாவட்ட நிா்வாகம் சேதமடைந்த பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விதிமீறல்: 30 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

கழுகுமலையில் மழை வேண்டி மாணவி யோகாசனம்

பாமக மாவட்ட செயலருக்கு கொலை மிரட்டல்: காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

அவிநாசி கோயிலில் 53 கிராம் தங்கம், ரூ.27.68 லட்சம் பக்தா்கள் காணிக்கை

குழந்தைகளுக்கு கல்வியுடன் பக்தியையும் கற்றுக் கொடுக்க வேண்டும்: இயக்குநா் பேரரசு

SCROLL FOR NEXT