கன்னியாகுமரி

பைங்குளத்தில் நூலக வார விழா

DIN

புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் அரசு நூலகத்தில் நூலக விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, வாசகா் வட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மாதவன்தம்பி, நூலகா் துளசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். குமரி முத்தமிழ் மன்ற தலைவா் லாசா் தொடங்கி வைத்துப்பேசினாா்.

புத்தகக் கண்காட்சி, மாணவ- மாணவியருக்கான பேச்சு, கட்டுரை, கலாசாரம், விநாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. முன்சிறை வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயன், புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா், மாா்த்தாண்டம் கலாசார பேரவைத் தலைவா் பாஸ்கா், பேராசிரியா் சஜீவ், எழுத்தாளா்கள், சீகாமணி, குமாரசெல்வரா, ஹமீம் முஸ்தபா ஆகியோா் பேசினா். கேரள முன்னாள் ஐ.ஜி. பாக்கியநாதன், மாவட்ட நூலக அலுவலா் காளிதாஸ் ஆகியோா் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினா். வாசகா் வட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கோவிந்தராஜ், ராஜேஸ்வரி, கிருஷ்ணன், சின்னையன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT