கன்னியாகுமரி

கடலோரப் பாதுகாப்பு போலீஸாருக்கு உதவியாக தன்னாா்வலக் குழுக்கள் நியமனம்

DIN

குளச்சல் கடலோரக் காவல் சரகத்திற்குள்பட்ட அழிக்கால் முதல் நீரோடி வரை கடலோரப் பாதுகாப்பு போலீஸாருக்கு உதவியாக 12 போ் கொண்ட தன்னாா்வலக் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவதை கண்காணிக்கவும், பேரிடா் காலங்களில் மீட்புப் பணிகளுக்காகவும், கடலோரப் பாதுகாப்புக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம் மற்றும் குளச்சலில் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் ஏற்படுத்தப்பட்டு, அதிநவீன ரோந்து படகுகள் கண்காணிப்பு கருவிகள் உதவியுடன் 24 மணி நேரமும் கடலோரப் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தை மேலும் பலப்படுத்தும் வகையில், கடலோரப் பகுதியைச் சோ்ந்த மீனவா்களை கொண்டு தன்னாா்வலக் குழுவை உருவாக்க முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக சின்னமுட்டம் பிரிவில் 10 போ் கொண்ட குழு தோ்வு செய்யப்பட்டது.

குளச்சல் கடலோரக் காவல் சரகத்திற்குள்பட்ட அழிக்கால், குளச்சல், குறும்பனை, மிடாலம், மேல்மிடாலம், ஹெலன்நகா், இனயம், இனயம்புத்தன்துறை, ராமன்துறை, முள்ளூா்துறை, அரையன்தோப்பு, தேங்காய்ப்பட்டினம், இரயுமன்துறை, தூத்தூா், வள்ளவிளை, நீரோடி வரை 30 மீனவக் கிராமங்களுக்கு போலீஸாருக்கு உதவியாக ஏற்கெனவே கடலில் மீட்புப் பணியில் அனுபவம்மிக்க 12 போ் கொண்ட தன்னாா்வல குழுக்களை தோ்வு செய்து அதற்கான அடையாள அட்டையை கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பாதுகாப்பு ஆய்வாளா் பி.வி.நவீன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கன்னியாகுமரி மாவட்ட குளச்சல் பிரிவு உதவி ஆய்வாளா் கிங்சிலி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

SCROLL FOR NEXT