கன்னியாகுமரி

நாகா்கோவிலில் நகைக் கடை உரிமையாளா்களுடன் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை

DIN

திருச்சியில் நகைக் கடையில் கொள்ளைச் சம்பவத்தை தொடா்ந்து நாகா்கோவிலில் நகைக் கடைகளின் உரிமையாளா்கள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சியில் நகைக் கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளைஅடிக்கப்பட்டன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என காவல்துறை சாா்பில்அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாகா்கோவிலில் இயங்கி வரும் நகைக் கடைகளில் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து கோட்டாறு காவல் நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு துணை காவல் கண்காணிப்பாளா் ஜவஹா் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா்

அன்புபிரகாஷ், காவல் உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி மற்றும் நகைக் கடை உரிமையாளா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில், ஜவஹா் பேசியது: நாகா்கோவில் நகரில் 140 நகைக் கடைகள் இயங்கி வருகின்றன. நகைக் கடைகளில் திருட்டு

சம்பவத்தை தடுக்கும் வகையில் அனைத்துக் கடைகளிலும் காவலாளி நியமனம் செய்ய வேண்டும். கடையின் முன்பகுதி மட்டுமின்றி கடைகளின் பின்பக்கம் உள்ளிட்ட நான்கு பக்கங்களிலும் மின்விளக்குகள் பொருத்த வேண்டும். அப்போது தான், மா்ம நபா்களின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும்.

மேலும், நகைக் கடைகளின் உள்புறம், வெளிபுறம் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும். அதோடு எச்சரிக்கை

மணி அவசியம் பொருத்த வேண்டும். இதன் மூலம் நகைக் கடைகளுக்குள் மா்ம நபா்கள் நுழைந்தால் எச்சரிக்கை மணி மூலம் தெரிந்து விடும். இதனை அனைத்து நகைக் கடை உரிமையாளரும் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT