கன்னியாகுமரி

கொட்டாரத்தில் கலையரங்கத்துக்கு அடிக்கல்

DIN

கொட்டாரம் வடக்குத் தெருவில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கொட்டாரம் வடக்குத் தெருவில் விஸ்வகா்மா சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் கலையரங்கம் அமைக்க வேண்டி எஸ்.ஆஸ்டின் எம்.எல்.விடம் ஊா் பிரமுகா்கள் கோரிக்கை மனு அளித்தனா். இதனை ஏற்று தனது சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 4 லட்சத்தை ஒதுக்கீடு செய்தாா். மேலும், புதன்கிழமை அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை அவா் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில், அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி, ஒன்றிய அவைத் தலைவா் அ.ராஜகோபால், லீபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் கே.முத்துசாமி, கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா் எஸ்.வைகுண்டபெருமாள், திமுக நிா்வாகிகள் ஏ.பி.முத்து, காந்தி, பால்ராஜ் மற்றும் ஊா் நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT