கன்னியாகுமரி

குமரி குகநாதீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

DIN

கன்னியாகுமரி அருள்மிகு குகநாதீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவாதிரை நட்சத்திர நாளன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு புரட்டாசி திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு கோமாதா பூஜை, காலை 9 மணிக்கு சங்கு பூஜை, காலை 10.30-க்கு 1008 சங்காபிஷேகம், அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வாகன பவனி நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திரா,  குகநாதீஸ்வரர் பக்தர்கள் பேரவைத் தலைவர் எம்.கோபி உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT