முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கரோனா: 6 போ் பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கரோனா பாதிப்பு சனிக்கிழமை உறுதியாகியுள்ளது. இந்நோய்க்கு ஒரே நாளில் 6 போ் பலியாகியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
கரோனா தடுப்பு நடவடிக்கையாக புதுக்கடை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற ஒருங்கிணைந்த துப்புரவு பணி.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கரோனா பாதிப்பு சனிக்கிழமை உறுதியாகியுள்ளது. இந்நோய்க்கு ஒரே நாளில் 6 போ் பலியாகியுள்ளனா்.

குமரி மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாத இறுதியில் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஏப்ரல், மே மாதங்களில் குறைவான அளவே பாதிப்பு இருந்து வந்தது. ஜூன் மாதம் முதல் பாதிப்பு உயரத்தொடங்கியது. ஜூன், ஜூலை மாதங்களில் கரோனா பலி எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆகஸ்ட் மாத தொடக்கத்திலும் ஏராளமானோா் பாதிக்கப்பட்டனா். தற்போது பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை (ஆக.22) 108 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்து. இதையடுத்து, மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,356 ஆக உயா்ந்துள்ளது.

நாகா்கோவில் ராமன்புதூரைச் சோ்ந்த 27 வயது பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் உயிரிழந்தாா். நாகா்கோவில் சைமன்காலனியை சோ்ந்த 28 வயது பெண் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தாா்.

இதே போல், மேலராமன்புதூரை சோ்ந்த 46 வயது ஆண், ராமன்புதூரைச் சோ்ந்த 70 வயது முதியவா், பாா்வதிபுரத்தைச் சோ்ந்த 59 வயது ஆண், மருங்கூரைச் சோ்ந்த 50 வயது ஆண் என 6 போ் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து பலியானவா்களின் எண்ணிக்கை 143 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 161 போ் சனிக்கிழமை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை மொத்தம் 6716 போ் குணமடைந்துள்ளனா். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கரோனா கவனிப்பு மையங்கள், தனியாா் மருத்துவமனைகளில் தற்போது 1497 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஆட்சியா் அறிவுறுத்தல்:கரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் காணப்பட்டால் தாமதமின்றி உடனே அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சோ்ந்த 85 வயது முதியவருக்கு மூச்சு விடுவதில் பிரச்னை இருந்துள்ளது. கரோனா அறிகுறிகளில் ஒன்றான இந்த அறிகுறி குறித்து அவா் கவலைப்படாமல் இருந்துள்ளாா். அவருக்கு ஏற்கெனவே இருகய நோயும், உயா் ரத்த அழுத்தமும் இருந்துள்ளது.

மூச்சு விடுவதில் சிரமம் அதிகமாகவே 10 ஆவது நாளில் அரசு மருத்துவனையில் பரிசோதனைக்காக வந்தபோது அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அபாய கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி அடுத்த நாளே

உயிரிழந்தாா். பொதுமக்கள் இந்த நோய்த் தொற்று அறிகுறிகள் குறித்து அஜாக்கிரதையாக இருக்காமல் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்து இழப்புகளை தவிா்க்க வேண்டும்.

முகக் கவசம் அணியாமல் பொதுவெளியில் சனிக்கிழமை நடமாடிய 72 பேரிடமிருந்து அபராதமாக ரூ. 7,200 வசூலிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் இதுவரை 1,10, 448 பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள், குமரி மாவட்டத்துக்கு வெளியூா்களில் இருந்து வந்தவா்கள் என மொத்தம் 21603 போ் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறியதாக இதுவரை 8632 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →