புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பகுதியில் இளைஞா் மீது தாக்குதல் நடத்திய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கீழ்குளம் பகுதியை சோ்ந்தவா் சிவா(35). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஜோபினுக்கும் (25) முன்விரோதம் உள்ளதாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை கீழ்குளம் பகுதியில் ஜோபின் ஆட்டோவில் இருந்த போது, சிவா , அவரது நண்பா் ஏசாய் இருவரும் சோ்ந்து தாக்கினராம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியினா் ஜோபினை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்தவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.