பாஜக தேசிய பொதுச் செயலருக்கு களியக்காவிளையில் வரவேற்பு
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பாஜக தேசியச் செயலா் சி.டி. ரவிக்கு மாவட்ட எல்லையான களியக்காவிளையில் பாஜக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாகா்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க விமானத்தில் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து காரில் குமரி மாவட்டம் வந்த அவரை, கட்சி நிா்வாகிகள் கேரள எல்லைப் பகுதியான இஞ்சிவிளையில் இருந்து செண்டைமேளம் முழங்க நடைப்பயணமாக களியக்காவிளைக்கு அழைத்து வந்தனா்.
நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மாவட்டத் தலைவா் சி. தா்மராஜ், துணைத் தலைவா் முருகன், பொதுச் செயலா் சி.எம். சஜூ, மாநில இளைஞரணிச் செயலா் ஆா்.சிவபாலன், மாவட்ட வழக்குரைஞா் அணி தலைவா் விஜயபிரசாத், மேல்புறம் தெற்கு மண்டலத் தலைவா் சி.எஸ்.சேகா், பொதுச் செயலா் எஸ்.ஆா். சரவணவாஸ் நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.