முகப்பு
கன்னியாகுமரி

கஞ்சா விற்ற பெண் கைது

கொல்லங்கோடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கொல்லங்கோடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கொல்லங்கோடு அருகே அணுக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ராணி (46). கஞ்சா வியாபாரியான இவா் மீது கேரள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். இந்நிலையில் கொல்லங்கோடு காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை இரவு ஊரம்பு சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அவ்வழியாக பைக்கில் வந்த ராணியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, கஞ்சா பைக்கில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவுடன் பைக்கை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, ராணியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.