மாா்த்தாண்டம் அருகே ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது
கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதாக 1 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதாக 1 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் செந்தில்வேல்குமாா் தலைமையில் போலீஸாா் இரவிபுதூா்கடையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். காரில் 1,000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும் அவற்றை கேரளத்துக் கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா் காா் ஓட்டுநா் நாகா்கோவில் இடலாக்குடி பகுதியைச் சோ்ந்த நசீா் (45), உடன் வந்த இரவிபுதூா்கடையைச் சோ்ந்த ரியாஸ் அகமது (43) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
Advertisement