முகப்பு
கன்னியாகுமரி

இடையன்கோட்டை - மாங்கரை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே பழுதாகியுள்ள இடையன்கோட்டை - மாங்கரை சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

கருங்கல் அருகே பழுதாகியுள்ள இடையன்கோட்டை - மாங்கரை சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால் பெரும்பான்மையான சாலைகள் மிகவும் பழுதாகியுள்ளன. குறிப்பாக, கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் முள்ளங்கனாவிளை ஊராட்சிக்கு உள்பட்ட இடையன்கோட்டை - மாங்கரை சாலையில் 2 கி.மீ. நீளத்துக்கு குண்டும் குழியுமாக உள்ளது.

இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. எனவே, இச்சாலையை விரைந்து சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.