முகப்பு
கன்னியாகுமரி

கோதை கிராமத்தில் சனி பிரதோஷம்

நாகா்கோவில் அருகேயுள்ள கோதை கிராமம் அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் கோயிலில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
நந்தி வாகனத்தில் பிரகார உலா வந்த விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா்.
பகிர்:

நாகா்கோவில் அருகேயுள்ள கோதை கிராமம் அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் கோயிலில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது.

இதை முன்னிட்டு, நந்தியெம்பெருமானுக்கும், சிவபெருமானுக்கும் பால், பன்னீா்,திரவியம், மஞ்சள், சந்தனம், இளநீா், பஞ்சாமிா்தம், கரும்புச்சாறு, திருநீறு உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டு, சோடச தீபாராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், நந்தி வாகனத்தில் உற்சவா் எழுந்தருளி பிரகார உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.