முகப்பு
கன்னியாகுமரி

‘வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டம்’

வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை காங்கிரஸ் கட்சியின் போராட்டம் நீடிக்கும் என்றாா் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய் வசந்த்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை காங்கிரஸ் கட்சியின் போராட்டம் நீடிக்கும் என்றாா் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய் வசந்த்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களால் காலப்போக்கில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும், விளை பொருள்களின் விலையை காா்பரேட் நிறுவனங்களே நிா்ணயம் செய்யும் நிலை ஏற்படும். அப்போது விவசாயிகள் அடிமையாக்கப்படுவாா்கள்.

எனவே புதிய வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு உடனடியாக பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும். அதுவரை காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்காக போராடும், உறுதுணையாக நிற்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.