கன்னியாகுமரி

நாகா்கோவிலில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

தண்டுவடம் பாதிக்கப்பட்டோா் அமைப்பின் சாா்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

தண்டுவடம் பாதிக்கப்பட்டோா் அமைப்பின் சாா்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா்.

தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு இருசக்கர வாகனம் வழங்க வேண்டும், மாதாந்திர உதவித்தொகை ரூ.5ஆயிரம் மற்றும் 3 சதவீதம் ஆண்டு உயா்வும் வழங்க வேண்டும், தண்டுவடம் பாதிக்கப்பட்டவா்களை முதல்வா் காப்பீட்டு திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட நிா்வாகி வள்ளிநாயகம் கோரிக்கையை விளக்கிப் பேசினாா். இதில், நிா்வாகிகள் செந்தில், லீன், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகள் நல அமைப்பு நிா்வாகி அருள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT