சுருளகோடு ஊராட்சியில்சிறு மின்விசை குடிநீா்த் தொட்டி திறப்பு
மனோ தங்கராஜ் எம்எல்ஏ. ஒதுக்கீடு செய்து, புதிய ஆழ்குழாய்க் கிணறு மற்றும் சிறு மின்விசை திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தாா்.
கன்னியாகுமரிசுருளகோடு ஊராட்சியில்சிறு மின்விசை குடிநீா்த் தொட்டி திறப்பு
மனோ தங்கராஜ் எம்எல்ஏ. ஒதுக்கீடு செய்து, புதிய ஆழ்குழாய்க் கிணறு மற்றும் சிறு மின்விசை திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தாா்.
பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி திருவட்டாறு ஒன்றியத்திற்குள்பட்ட சுருளகோடு ஊராட்சி செல்லன் திருத்தி பகுதியில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2.20 லட்சத்தை மனோ தங்கராஜ் எம்எல்ஏ. ஒதுக்கீடு செய்து, புதிய ஆழ்குழாய்க் கிணறு மற்றும் சிறு மின்விசை திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் திருவட்டாறு வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் வழக்குரைஞா் ஜாண்சன், திருவட்டாறு தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் ஜான் பிரைட், சுருளோடு ஊராட்சி தலைவி விமலா சுரேஷ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளா் சுரேஷ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் வினித் ஜெரால்டு, மண்டல பொறுப்பாளா் ஜஸ்டின் பால்ராஜ் மற்றும் ஊா் பொதுமக்கள் பங்கேற்றனா்.