முகப்பு
கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே 1 டன் ரேஷன் அரிசி, 1,365 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே மீனவ கிராமத்தில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி, 1,365 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெயை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே மீனவ கிராமத்தில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி, 1,365 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெயை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நித்திரவிளை காவல் நிலைய ஆய்வாளா் ராஜ், உதவி ஆய்வாளா் மோகன் ஜாஸ்லின் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் ரேஷன் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அப் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டை சோதனை செய்த போது அங்கு 1,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு அறையில் மேற்கொண்ட சோதனையில் 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 39 கேன்களில் மொத்தம் 1,365 லிட்டா் அளவிலான, விசைப்படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய்யும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணெயை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனா்.

இது குறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →